சிம்பாடி சந்தையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மரபணு வரிசையை சீனா உலக சுகாதார நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது
சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகளிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் பல தடுப்பு நடவடிக்கைகளினால் வூஹானில் வெகுவிரைவில் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிய அந்நாட்டு மக்களின் வாழ்க்கை வெகு நாட்கள் நீடிக்கவில்லை. 56 நாட்களுக்குப் பிறகு சீனாவின் தலைநகரான பீஜிங்கில் மீண்டும் தொற்று ஏற்படத் தொடங்கியது. இதற்கு காரணமாக பீஜிங்கில் இருந்த சின்பாடி என்ற மொத்த சந்தை என்பது தெரிய வந்தது.
அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் அதிகம் விற்கப்படும் சால்மன் மீன்களை வெட்டும் பலகையில் கொரோனாவைரஸ் கண்டறிய பட்டதாகவும், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட தொற்றுகள் ஐரோப்பாவில் இருந்து வந்துள்ளது என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சீன நச்சு உயிரியல் நிபுணர்கள் கூறுகையில், “உறைந்த உணவில் குளிர் மற்றும் ஈரமான நிலையை பாதுகாக்க சீல் வைக்கப்பட்டிருந்ததால் போக்குவரத்தின் போதுகொரோனா தொற்று மாற்றம் அடையவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை நிபுணர் நிருபர்களிடம் கூறியபோது, “பீஜிங்கில் தற்போதைய நிலை கடந்த வருடம் வூஹானில் ஏற்பட்ட கொரோனாவின் தாக்கத்தை நினைவுபடுத்துகிறது” என கூறியுள்ளார். ஆனால் இதனை உடனடியாக அங்கீகரிக்காத உலக சுகாதார நிறுவனம் சீனாவிடம் பல கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில் பீஜிங் நகரில் இருக்கும் மொத்த சந்தையில் பரவிய தொற்றின் மரபணு வரிசையை தற்போது சீனா உலக சுகாதார நிறுவனத்திடம் வழங்கியுள்ளது. இதனை அந்நிறுவனம் ஆராய்ந்து பிறகு வைரஸின் தோற்றம் குறித்து உறுதியான தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.