டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தொடர்ந்து 4 மாதங்களாக ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் 47 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஜியோ 19 லட்சம் வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது. தொடர்ந்து 4 மாதங்களாக ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தாலும், இந்திய அளவில் ஜியோ தனது முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இதேக் காலக்கட்டத்தில் வோடோபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.