ஜெர்மன் நாட்டில் ஆண் கோழிக்குஞ்சுகள் கொல்லப்படுவதற்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெர்மன் அரசு ஆண் கோழிக்குஞ்சுகள் கொல்லப்படுவதற்கு தடை விதித்து சட்டம் நிறைவேற்றியிருக்கிறது. இதனை வரும் 2022 ஆம் வருடம் ஜனவரி 1ம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஜெர்மன் நாடாளுமன்றம் நேற்று வெளியிட்டுள்ளது.
ஜெர்மன் நாட்டில் கோழி குஞ்சு வளர்ப்பு முறை சரியல்ல என்று விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில் ஜெர்மன் மத்திய அரசு இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது உலக நாடுகளில் இருக்கும் கோழிப்பண்ணைகளில் பாரம்பரியமாகவே, குஞ்சு பொறித்த சில நேரத்தில் ஆண் கோழிக்குஞ்சுகளை கொன்றுவிடுவார்கள். அது தான் வழக்கமாக இருந்துள்ளது.
அதற்கு காரணம் ஆண் கோழிக்குஞ்சுகள் முட்டையிடுவதில்லை. மேலும் இறைச்சி உற்பத்திக்கும் ஏற்றதாக இல்லை. எனவே அவற்றை வளர்த்தால், பொருளாதாரத்தில் பிரச்சினை ஏற்படும் என்பதாலேயே கொன்றுவிடுகிறார்கள். ஜெர்மனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 45 மில்லியன் ஆண் கோழிக்குஞ்சுகள் கொல்லப்பட்டிருக்கிறது.