ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மோர்கல் வரும் 31-ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 2-ஆம் தேதி வரை அவர் இந்தியாவில் தங்கயிருக்கிறார். இந்த தகவலை இருநாட்டு தலைவர்களும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நியூயார்கில் ஐநா பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மோர்கலை சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில் இரு நாட்டு தலைவர்களும் மீண்டும் சந்திக்க உள்ளனர்.