Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக்கில் அரைகுறை ஆடைகளை அணியமாட்டோம்.. ஜெர்மன் வீராங்கனைகள் எதிர்ப்பு..!!

ஜெர்மன் நாட்டின் தடகள வீராங்கனைகள் உடல் தெரியும் அளவிற்கு இருக்கும் ஆடைகளை அணிவதை எதிர்க்கிறார்கள்.

இந்த வருடத்திற்கான ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்ததிலிருந்தே, பெண்களின் ஆடை தொடர்பில், பல பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. பிரிட்டன் நாட்டிலிருந்து வந்த தடகள வீராங்கனையான Olivia Breen, அணிந்திருந்த உடை சிறிதாக இருக்கிறது என்று ஒரு நடுவர் கூறியது, அதிக சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும், நார்வேயை சேர்ந்த பெண்கள், கைப்பந்து அணியில் உள்ளாடைகள் மட்டும் அணிந்து கொண்டு விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் அந்த அணியினருக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில், தற்போது ஜெர்மன் நாட்டின் தடகள வீராங்கனைகள், உடலை காட்டும்படி, இருக்கும் ஆடைகளை அணிந்துகொண்டு விளையாடுவதற்கு மறுத்தனர். இதனால், முழுவதுமாக உடலை மறைக்கும் ஆடைகளுடன் போட்டிகளில் கலந்துகொண்டனர்.

Categories

Tech |