ஜெர்மன் சுகாதார அமைச்சர் Jens Spahn இன்னும் ஓரிரு மாதங்களில் மக்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெர்மனியில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் 64 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தப் பாதிப்பு எண்ணிக்கையானது கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் 50% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெர்மன் சுகாதார அமைச்சர் Jens Spahn செய்தியாளர்கள் சந்திப்பின் போது இன்னும் ஓரிரு மாதங்களில் ஜெர்மானியர்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி உட்பட செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதேசமயம் இந்த குளிர்கால முடிவில் ஜெர்மனியில் உள்ள மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவார்கள் அல்லது உயிரிழந்து விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். எனவே அனைவரும் கட்டாயம் தடுப்பூசியினை செலுத்தி கொள்ள வேண்டும் என்று Jens Spahn கேட்டுக் கொண்டுள்ளார்.