Categories
உலக செய்திகள்

3 வாரங்கள் பொது முடக்கம் அறிவிக்க வேண்டும்…. தீவிர சிகிச்சை பிரிவுகளில் இடம் இருக்காது…. எச்சரித்த மருத்துவர்கள்….!!

ஜெர்மன் மருத்துவமனைகளில் நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்க இடம் இல்லாமல் போகும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜெர்மன் மருத்துவமனைகளில் 10 சதவீதம் படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் காலியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதைப் பற்றி மருத்துவர்கள் குழுவின் தலைவர் கூறியதாவது “இந்த நேரத்தில் 3 வாரங்கள் பொது முடக்கம் அறிவித்தால் மட்டுமே கொரோனா தொற்று புதிதாக உருவாவதில் இருந்து நாம் தப்பிக்க முடியும். மேலும் தடுப்பூசி போட நேரமும் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.

அதாவது தற்போதைய நிலைமையில் 4,500 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒரு மாதத்திற்கு முன்பு வரை இந்த எண்ணிக்கை 3,000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்சமயத்தில் ஜெர்மன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் 24000 படுக்கைகள் இருப்பதாகவும் ஏழு நாட்களுக்குள் மேலும் 10,000 படுகைகள் தயார் செய்ய முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படுக்கைகள் அனைத்துமே கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் அல்ல மற்ற நோய்களுக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கும் தான் என்பதை நாம் மறக்கக்கூடாது. ஆகவே ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமல் நிரம்பி வழிந்த நிலைமையை மீண்டும் சந்திக்க இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |