ஜெர்மன் அரசாங்கம், சிலை கடத்திய வழக்குகளில் சிக்கிய சுபாஷ் கபூரை தங்கள் நாட்டிற்கு அனுப்புமாறு இந்தியாவிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறது.
சிலை கடத்தலில் மன்னனாக அறியப்பட்ட சுபாஷ் கபூர் மீது ஐந்து வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் வலை வீசி தேடி வந்த நிலையில், கடந்த 2011 ஆம் வருடத்தில் சர்வதேச காவல்துறையினரின் உதவியோடு ஜெர்மனியிலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.
சுபாஷ் கபூர் குறித்த வழக்குகளை 10 ஆண்டுகளாக விசாரித்து வருகிறார்கள். இதில் எந்த வழக்கிற்காக, அவர் தமிழ்நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டாரோ, அந்த வழக்கு தொடர்பில் தற்போது வரை எந்த தீர்ப்பும் அளிக்கப்படவில்லை. தாமதம் ஏற்பட்டு வருவதால் ஜெர்மன் அரசு அவரை மீண்டும் தங்கள் நாட்டிற்கு அனுப்புமாறு இந்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறது.
எனவே, அந்த வழக்கு மட்டுமன்றி, இந்தியா குறித்த வேறு எந்த வழக்கிற்கும் நாங்கள் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என்று ஜெர்மன் அரசு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது. இதனை, வெளியுறவுத்துறை செயலாளர், தமிழ்நாட்டின் செயலாளராக இருக்கும் இறையன்புவிற்கு தெரியப்படுத்தினார். இதனையடுத்து, சுபாஷ் கபூரின் சிலை கடத்தல் வழக்குகளை விரைவில் முடிப்பதற்காக தமிழக காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.