Categories
உலக செய்திகள்

“குறைய தொடங்கியது கொரோனா!”.. கட்டுப்பாடுகளை தளர்த்த ஜெர்மன் முடிவு..!!

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதால் கட்டுப்பாடுகளில்  தளர்வுகளை ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. 

ஜெர்மனியில் பல்வேறு மாநிலங்களில் சுமார் 6 மாதங்களுக்கும் அதிகமாக பொதுமுடக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனால் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. எனவே விதிமுறைகளில் தளர்வுகள் ஏற்படுத்த ஜெர்மன் முடிவெடுத்திருக்கிறது. நாட்டில் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு தொற்று எண்ணிக்கை 100 க்கும் கீழ் குறைந்திருக்கிறது.

எனவே பெர்லின் மாநில அரசாங்கம், வரும் மே 19 ஆம் தேதியிலிருந்து இரவு ஊரடங்கு மற்றும் கடைகளில் பொருட்கள் வாங்குவது தொடர்பான விதிமுறைகளில் தளர்வு மற்றும் மே 21ம் தேதியிலிருந்து வெளிப்புற உணவகங்களுக்கு அனுமதி வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது. இதே போல் வேறு சில மாநிலங்களிலும் புதன்கிழமையில் இருந்து கட்டுப்பாடுகள் தளர்த்துவது குறித்து திட்டமிடப்பட்டிருக்கிறது.

இதனிடையே ஜெர்மன் சுகாதார அமைச்சரான ஜென்ஸ் ஸ்பான், மாநிலங்கள் கட்டுப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்தலாம். எனினும் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் இதே போல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |