ஜெர்மானியர் ஒருவர் சுவிஸ் நாட்டவர் ஒருவரை கடத்தி பிறகு விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெர்மானியர் ஒருவர் சுவிஸ் நாட்டவர் ஒருவரை கடத்தி பிறகு விடுவித்தார். அந்த சுவிஸ் நாட்டை சேர்ந்தவர் சாதாரண ஆள் இல்லை என்றும் சுவிட்சர்லாந்தின் பெடரல் தடுப்பூசி ஆணையத்தின் தலைவரான Christoph Berger என்றும், கடந்த மாதம் 31 ஆம் தேதி தான் கடத்தப்பட்டடு, பணம் கேட்டு தன்னை மிரட்டி துன்புறுத்தியதாகவும், துப்பாக்கியை காட்டி கொன்று விடுவேன் என்று அச்சுறுத்திய தாகவும் தன் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
இதனை அறிந்து கொண்ட போலீசார் அந்த ஜெர்மானியரை பிடிப்பதற்காக பல இடத்தில் விசாரித்த நிலையில் Wallisellen நகரில் இருப்பதாக அறிந்த அவரின் வீட்டை சுற்றி வளைத்தனர். இதனை தொடர்ந்து திடீரென தன் காதலியை சுட்டுக் கொன்ற அந்த ஜெர்மானியர் போலீசாரால் பிடிக்கும் முயற்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தில் கடத்தப்பட்டவர் யார் என்று தெரியாத நிலையில் தானாகவே வந்து கடத்தப்பட்டது நான் தான் என்று ஒப்புக் கொண்டமையால் பல உண்மைகள் வெளியே வந்தது. இந்த வழக்கில் தொடர்புடையவர் என கருதப்படும் 34 வயது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், Bergerஐக் கடத்தியவர், தடுப்பூசி எதிர்ப்புக் கொள்கைகள் கொண்டவர் எஉள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளிவந்துள்ளது.