ஜெர்மனில் இராணுவ வீரர் ஒருவர் சிரிய அகதியாக மற்றொரு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது.
ஜெர்மன் ராணுவ வீரரான Lt Franco என்பவர் David Benjamin என்று தன் பெயரை மாற்றி சிரிய அகதியாக தன்னை பதிவு செய்து இரு வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில் இவர் கழிவறைக்குள் ஒரு துப்பாக்கியை மறைத்து வைத்துள்ளார். அதனை எடுக்க சென்ற நிலையில் அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக்கொண்டார்.
மேலும் அதிகாரிகள் கூறியுள்ளதாவது, ஜெர்மனின் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas, யூத சமூக ஆர்வலர் மற்றும் துணை சபாநாயகர் போன்றோரை இவர் கொலை செய்துவிட்டு இஸ்லாமியர் ஒருவர் மீது பழியை போட்டிருக்கிறார். இதனால் இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரச்சனையை ஏற்படுத்த திட்டம் தீட்டியதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இதுமட்டுமல்லாமல் அவரின் பெற்றோரின் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் Lt Franco, இவை அனைத்தையும் மறுத்ததோடு, தன்னை ஒரு அகதியாக பதிவு செய்ய காரணம், “ஜெர்மன் புகலிட அமைப்பின் ஓட்டைகளை வெளிப்படுத்த தான்” என்று கூறியுள்ளார்.
மேலும் தன் பெற்றோர் பாதுகாப்பிற்காக தான் ஆயுதங்கள் வைத்திருந்தனர் என்றும் ஆஸ்திரிய பாதுகாப்பு அமைச்சகத்தின் பார்ட்டிக்கு செல்லும்போது ஒரு துப்பாக்கியை பார்த்ததாகவும், அதனை எடுத்து வைத்தபோது விமானத்தில் ஏற நேர்ந்ததாக கூறியுள்ளார். எனவே பதற்றத்தில் அதனை கழிவறையில் மறைத்து வைத்தேன்.
அதனை திரும்ப எடுக்க சென்றபோது மாட்டிக் கொண்டதாக கூறியிருக்கிறார். அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சுமார் பத்து வருடங்கள் அவருக்கு சிறை தண்டனை வழங்க வாய்ப்பு இருக்கிறது