ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.
ஜெர்மன் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தரநிலையில் பின்தங்கி உள்ள சீனாவை சேர்ந்த ஜாங் யி மேனை எதிர்கொண்டார்.இதில் முதல் செட்டை 14-21 என்ற கணக்கில் இழந்த சிந்து ,அடுத்த செட்டை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் 3-வது செட்டை ஜாங் யி மேன் 14-21 என கைப்பற்றினார். இறுதியாக 14-21 21-15 14-21 என்ற செட் கணக்கில் ஜாங் யி மேயிடம், பிவி சிந்து தோல்வியடைந்து வெளியேறினார்.