Categories
உலக செய்திகள்

ஜெர்மனி சென்ற பிரதமர் நரேந்திர மோடி…. உற்சாகமாக வரவேற்ற இந்திய மக்கள்…!!!

பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மன் நாட்டிற்கு சென்ற நிலையில் அங்கிருக்கும் இந்திய மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

ஜி-7 நாடுகளின் உச்சிமாநாடானது ஜெர்மனியில் இருக்கும் ஸ்குலோஸ் எல்மாவ் என்னும் இடத்தில் நடைபெறுகிறது. எனவே, ஜெர்மன் நாட்டு பிரதமர் இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு ஜெர்மன் நாட்டிற்கு புறப்பட்டுள்ளார்.

இன்று அந்நாட்டிற்கு சென்றடைந்த அவரை, மக்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.  அதனைத்தொடர்ந்து முனிச் நகரத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலுக்கு மோடி  சென்றிருக்கிறார். அங்கு இந்திய மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்று இருக்கிறார்கள். மேலும் மோடி அங்கிருந்த குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.

Categories

Tech |