ஜெர்மனியின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இது தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஜெர்மனியில் தலைநகரான பெர்லினில் நூற்றுக்கணக்கானோர் கட்டுப்பாடுகளை விலக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்து வருவதால் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையிலும் நீதிமன்றத்தின் அறிவிப்பை பொருட்படுத்தாமல் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டக்காரர்கள் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் கொரோனா ஒழிக, சுதந்திரம் வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததனர்.இதனிடையே காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் போராட்டக்காரர்கள் தங்கள் ஆயுதங்களால் காவல்துறையினரை தாக்க முயன்றதால் கண்ணீர் புகை குண்டுகள், தடியடி நடத்தி போராட்டத்தை கலைக்க முயன்றதாக தெரிவித்துள்ளனர்