ஜெர்மன் நாட்டில் பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜெர்மன் நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் கீழவை மற்றும் 16 மாகாணங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று வாக்களித்தார்கள். இதில் பிராங்க் வால்டர் அதிகமான வாக்குகளை பெற்றார். இதன்மூலம் அவர் இரண்டாவது தடவையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அதன்பின் அவர் உரையாற்றினார். அப்போது, ஜனநாயகத்திற்கு போராடும் நபர்களின் பக்கம் நிற்பேன் என்றார். மேலும், உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதிகளில் ரஷ்யா படைகளை குவிப்பது, அந்நாட்டிற்கு தான் ஆபத்து. அங்கிருக்கும் மக்கள் அச்சம் இல்லாமல் வாழ உரிமை இருக்கிறது, அதை அழிப்பதற்கு எந்த நாட்டிற்கும் உரிமை கிடையாது என்று கூறியிருக்கிறார்.