ஜெர்மனில் 16 ஆண்டுகள் ஆட்சி செய்த ஏஞ்சலா மெர்கல் பதவியிலிருந்து விலகுவதால் அந்நாட்டிற்கு புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
ஜெர்மன் நாட்டில் பாராளுமன்ற தேர்தலானது வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் இருபது பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் 16 ஆண்டுகளாக பதவியில் இருந்த ஏஞ்சலா மெர்க்கல் தற்பொழுது விடைபெறுகிறார். இதனால் ஜெர்மனிக்கு ஒரு புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். அதிலும் ஏஞ்சலா மெர்கல் பதவி காலத்தில் சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி, ஐரோப்பியா அரசியல் அதிகாரத்தால் ஏற்பட்ட கடன் சுமை மற்றும் கொரோனா தொற்று போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஜெர்மனி சமாளித்துள்ளது.
இதன் காரணமாகவே ஏஞ்சலா மெர்கல் அனைவரிடமும் பாராட்டு பெற்றார். அதிலும் ஏஞ்சலா மெர்கலின் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சியுடன் 2013 ஆம் ஆண்டு முதல் கூட்டணி வைத்துள்ள சமூக ஜனநாயகவாதி கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த கட்சி அமோகமான வெற்றி அடையுமா என்றால் அது சந்தேகத்திற்குரியது. குறிப்பாக சமூக ஜனநாயகவாதி கட்சியைச் சேர்ந்த Olaf Scholz தான் ஏஞ்சலா மெர்கலின் அரசியல் வாரிசாக கருதப்படுகிறார்.
ஏற்கனவே இவர் நிதித்துறை அமைச்சராகவும் துணை வேந்தராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசியல் சூழல் கடினமாக மாற வாய்ப்பு இல்லை. எனினும் பொருளாதாரத்தை செயல்படுத்துவதற்கான அனைத்து நடைமுறைகளும் மாறும். இதனால் மக்கள் பயன்பெறுவார்கள். ஏனெனில் ஜெர்மனியில் ஏஞ்சலா மெர்கலின் தலைமையில் பொருளாதாரம் சிறப்பாக செயல்படவில்லை.
அதாவது பொருட்களின் விலை நிலையாக இருப்பது, மக்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தல் போன்றவை ஒரு நல்ல பொருளாதாரத்த்திற்கான அறிகுறிகளாகும். ஆனால் GDPயின் வளர்ச்சி குறைந்தே காணப்படுகிறது. அதாவது நுகர்வு மற்றும் முதலீட்டை மேம்படுத்த ஜெர்மனி இன்னும் அதிக அளவு செலவு செய்திருக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஜெர்மன் அரசு அதன் பொருளாதாரத்தை எப்பொழுதும் நடுநிலையாக வைத்திருந்தது.