Categories
உலக செய்திகள்

மரத்தில் மோதி கார் விபத்து…. 2 பேர் பலி…. பிரபல நாட்டில் பயங்கரம்….!!

ஜெர்மனியில் 6 பேர் சென்ற கார் பயங்கர விபத்துக்கு உள்ளாகி 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியின் Prignitz மாவட்டத்தின் Triglitz பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை 17 வயதான சிறுமி ஒருவர் ஓட்டிவந்த கார் பாதையை விட்டு விலகி மரத்தில் மோதி தூக்கி வீசப்பட்டது. மேலும், காயம் அடைந்த சிறுமிகளில் ஒருவர் 1 கி.மீ தூரத்துக்கு ஓடி வந்து நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்த 51 வயதான ஒருவரிடம் உதவிகேட்டார். இதனை தொடர்ந்து, அந்த நபர் விபத்து நடந்த பகுதிக்கு மீட்பு படையினரை வரவழைத்தார்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “காரை ஓட்டிவந்த நபரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை. கார் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த வாகனம் எப்படி அவர் கைக்கு வந்தது என்று தெளிவாக தெரியவில்லை” என்றும் தெரிவித்தனர். மேலும், காரில் மது பாட்டில்கள் இருந்ததால், காரை ஓட்டியவர் மது அருந்தினாரா என்பதை நச்சுயியல் (toxicology) அறிக்கை மூலம் மட்டுமே தெரியவரும் என்றும் போலீசார் கூறினர்.

இந்த நிலையில், மீட்பு பணியாளர்கள் 17 மற்றும் 15 வயது சிறுவர்கள் விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்ததை கண்டனர். மேலும், 18 வயது ஆண் மற்றும் 14, 16 மற்றும் 17 வயதான மூன்று சிறுமிகள் பலத்த காயங்களுடன் ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ள விபத்து பகுதிக்கு ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

Categories

Tech |