ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் ஆட்டத்தின் இறுதி சுற்றுக்கு இந்திய வீரர் லக்சயா சென் முன்னேறியுள்ளார்.
ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் ஆட்டத்தின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த லக்சயா சென் உலகச் சாம்பியனான விக்டரை எதிர்த்து விளையாடினார். சுமார் ஒரு மணி நேரமாக நடந்த இந்தப் போட்டியில் 21-13,12-21,22-20 என்ற செட்களில் வெற்றி பெற்ற லக்சயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதையடுத்து இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் தாய்லாந்து வீரருடன் இந்திய வீரர் லக்சயா சென் போட்டியிட இருக்கிறார்.