ஜெர்மன் அரசு அபாயமான நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை இணைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், டெல்டா மாறுபாடு பரவுவதால், அதனை ஆபத்தான பட்டியலில் இணைத்திருப்பதாக ஜெர்மன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவிலிருந்து தங்கள் நாட்டிற்குள் வரும் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது முக்கிய காரணத்திற்காக அனுமதிக்கப்படலாம் என்று தெரிவித்திருக்கிறது.
இந்த விதிமுறை இன்றிலிருந்து அமல்படுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்தாதவர்களும், தொற்றிலிருந்து குணமடைந்ததற்கான ஆதாரம் அளிக்காதவர்களும் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். தொற்று பாதிக்கவில்லை என்ற ஆதாரம் வைத்திருக்கும் நபர்கள் 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்.
இதற்கு முன்பு, அமெரிக்க மக்கள் தடுப்பூசி செலுத்தவில்லை, எனினும் பாதிப்பு இல்லை என்ற ஆதாரத்தை வைத்திருந்தாலே ஜெர்மனியில் அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் தற்போது அமெரிக்காவில் டெல்டா மாறுபாடு காரணமாக ஜெர்மனி கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.