Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிற்கு ஆயுத உதவியா…? ஜெர்மன் வெளியிடவுள்ள அறிவிப்பு…!!!

உக்ரேன் நாட்டிற்கு ஜெர்மனி, ஆயுத உதவி வழங்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் பல நாட்களாக அழுத்தம் கொடுத்ததில் தற்போது ஜெர்மன் ஆயுதங்கள் அளிக்க முன்வந்திருக்கிறது.

ஜெர்மன் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் Christine Lambrecht, தங்கள் நாட்டில் இருக்கும் அமெரிக்காவின் ஒரு ராணுவ தளத்தில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் ஒரு கூட்டத்தில் உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் அளிக்கவுள்ளது தொடர்பில் சிறிது நேரத்தில் அறிவிப்பு வெளியிடவுள்ளார். 50 Gepard anti-aircraft vehicles என்ற விமானங்களை துப்பாக்கியால் சுட்டு அழிக்கக்கூடிய  வாகனங்களை அந்நாட்டிற்கு அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெர்மன் அரசு, இந்த விமான எதிர்ப்பு வாகனங்களை உக்ரைன் நாட்டிற்கு கொடுப்பது குறித்து கடந்த பிப்ரவரி மாதத்திலேயே திட்டமிட்டிருந்தது. ஆனால், அந்நாட்டின் புதிய சேன்ஸலர் Olaf Scholz  அதனை தாமதித்து கொண்டிருந்தார். மேலும் Scholz-ன் SPD கட்சி ரஷ்ய நாட்டுடன் நெருங்கிய உறவில் இருக்கிறது.

எனவே, அக்கட்சி உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் அளித்தால் அந்த வீரர்கள் அதனை சரியாக பயன்படுத்துவதற்கு பயிற்சி மேற்கொள்ள அதிக காலம் தேவைப்படும் எனவும் அதிபர் விளாடிமிர் புடின் கோபமடைவார் எனவும் பல காரணங்களை கூறியது. எனினும், ஜெர்மன் நாட்டின் சர்வதேச கூட்டணி நாடுகள் மற்றும் உள்நாட்டு கூட்டணி கட்சிகள் அதிக அழுத்தம் கொடுத்ததால் தற்போது ஜெர்மன் ஆயுதங்கள் அளிக்க முன்வந்திருக்கிறது.

Categories

Tech |