Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ”இந்தியாவில் 28 பேருக்கு கெரோனா” அதிர்ச்சி தகவல் ….!!

இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 25 பேர்கள் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை நடந்து வருகிறது என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே கேரளாவில் மூன்று பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு பின்னர் இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் குணமடைந்தார்.

இந்நிலையில் தற்போது வரை இதோடு சேர்த்து இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 25 பேருக்கு கோரோனா தோற்று உறுதியாகிய நிலையில் இத்தாலியிலிருந்து இந்தியா வந்த ஒரு பெரிய சுற்றுலா பயணிகள் குழுவில் 17 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது.அவர்கள் 17 பேரும் தனிமைப்பட்டு மருத்துவ வசதிகளை சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தாலி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலாவுக்கு வந்திருந்த ஒருவருக்கு இதுபோல வைரஸ் தொற்று இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்க சோதனை நடத்தப்பட்டது. அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியான பின்னர் அவருடன் பயணம் செய்தவர்கள் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.அதில் ஒருவர் இந்தியர் என்பதும் , அவர் தான் இத்தாலியர்களுக்கு வாகன ஓட்டியாக இருந்துள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 28 பேரில் 17 பேர் இத்தாலியர்கள் , மீதமுள்ள 11 பேர் இந்தியர்கள். தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக இவர்கள் அனைவருமே தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் ஒருவர்க்கு டெல்லி மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல தெலுங்கானாவில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 6 பேருக்கும் இந்த வைரஸ் பரவி இருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்களும் தற்போது டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸை தடுப்பதற்காக இன்று காலை 11 மணிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மாநில அரசுகளுக்கு றிவுரைகளை வழங்கி வருகிறது.

Categories

Tech |