அமெரிக்காவில் சிறைக் கைதி ஒருவன் காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் உள்ள காவல் நிலைய சிறையில் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த கைதி கேப்ரின் என்பவனை அதிகாரி ஒருவர் நெஞ்சில் கைவைத்து சிறைக்குள் போகுமாறு கூறியதால்,
ஆத்திரமடைந்த கேப்ரின் அதிகாரியை மூக்கில் பஞ்ச் விட்டு அதன்பின் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதை பார்த்து ஓடி வந்த அதிகாரிகள் கேப்ரினை மடக்கிப் பிடித்து சிறையில் அடைத்தனர். காவல்துறையினரை தாக்கியதாககூறி அவன் மீது கூடுதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகிய நிலையில் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.