தெலுங்கானா மாநிலத்தில் இளம் காதல்ஜோடி பூங்காவில் வைத்து திருமணம் செய்து கொண்டது மட்டுமில்லாமல், அங்கேயே முதலிரவை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பஞ்சாரா பகுதியில் வாழ்ந்துவரும் 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். முதலில் காதலுக்கு மறுத்த சிறுமியை தன்னுடைய செயல்கள் மூலம் ஈர்த்து தனது காதல் வலையில் வீழ்த்தி,யுள்ளார் அந்த இளைஞன். இதை அடுத்து இருவரும் ஒன்றாக சேர்ந்து பார்க், பீச் சினிமா என ஊர் சுற்றி வந்துள்ளனர். மேலும் ஹைதராபாத்தில் உள்ள யூசுப்குடே என்ற பூங்காவிற்கு இவர்கள் இருவரும் அடிக்கடி சென்று வந்துள்ளனர். இதேபோல் ஒருநாள் இருவரும் சேர்ந்து சென்ற போது அந்த இளைஞன் எதிர்பாராதவிதமாக அவரது பையில் இருந்த தாலியை எடுத்து அந்த சிறுமியின் கழுத்தில் கட்டியிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அந்த இளைஞரை திட்டியுள்ளார். பிறகு அந்த சிறுமியை சமாதானம் செய்துவிட்டு பூங்காவிலே பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்துள்ளார். அதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்ததால், தமக்குத் திருமணமாகி விட்டது என்பதால் இதெல்லாம் தவறு இல்லை எனக் கூறி பூங்காவிலே தனது முதலிரவை நடத்தியுள்ளார். இதையடுத்து இருவரும் சேர்ந்து அந்த இளைஞனின் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த சிறுமியை கண்டித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் அழுதுகொண்டே வீடு சென்ற சிறுமி கழுத்தில் இருந்த தாலியை மறைத்துக்கொண்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த சில தினங்களாக சிறுமி தனியாக அழுவதை கண்ட அவரது தாயார் என்ன நடந்தது என்று விசாரணை செய்தபோது, அந்த சிறுமி நடந்த அத்தனையும் தாயாரிடம் கூறியுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாயார் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அந்த இளைஞனின் மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்து இளைஞரை கைது செய்த போலீசார் பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.