சென்னை கோட்டத்துக்குட்பட்ட ரயில் முன்பதிவு நிலையங்கள் நாளை முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோட்டத்தில் இருக்கக்கூடிய சென்னை சென்ட்ரல், சென்னை எக்மோர், சென்னை பீச, திருமயிலை, மாம்பலம், தாம்பரம், திண்டிவனம், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் மார்ச் மாதம் 30ம் தேதி வரை ரிசர்வ் செய்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும்,
அதே போல ஏப்ரல் 1லிருந்து 14 வரை ரயில் டிக்கெட் புக் செய்தவர்கள் 12ம் தேதியிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும், ஏப்ரல் 15 முதல் ஜூன் 30 நாள் வரை ரயில் முன்பதிவு செய்தவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என ஜூன் மாதம் வரை தேதி அறிவிக்கப்ட்டுள்ளது. இதனால் ரயில் பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் தங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.