Categories
தேனி மாவட்ட செய்திகள்

போற வழியில இறக்கிவிட்ருங்க… நடுவிலேயே பரிதாபமாக உயிரிழப்பு… மேலும் 3 பேர் படுகாயம்…!!

தேனி மாவட்டத்தில் திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபதடைந்ததில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து சிறுவன் உட்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் ராஜா(38) என்பவர் அவரது மகன் நிரஞ்சனின் காதணி விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க நேற்று முன்தினம் திருப்பூரில் இருந்து தேனிக்கு அவரது மகன் நிரஞ்சனுடன் காரில் வந்துள்ளார். இந்நிலையில் காரை அவரது உறவினர் குமரவேல்(31) என்பவர் ஓட்டியுள்ளார். இதனையடுத்து தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவில் உள்ள அவரது உறவினர்களை விழாவிற்கு அழைப்பு விடுத்து மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது தேனி தர்மராஜபுரத்தை சேர்ந்த குமார்(30) என்பவர் செல்லும் வழியில் ஒட்டன்சத்திரத்தில் இறக்கிவிடுமாறு உதவி கேட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் காரில் திருப்பூரை நோக்கி சென்றுள்ளனர்.

இந்நிலையில் கரட்டுப்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பனைமரம் மீது மோதி கவிழ்ந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் காரில் இருந்த ராஜா, குமரவேல், நிரஞ்சன் மற்றும் குமாரை மீட்டு தேனி மருத்துவமனைக்கு அனுப்பு வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்வதற்குள் குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்வம் குறித்து தகவலறிந்து வந்த க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |