புதுச்சேரி_யில் இரண்டு மீனவ கிராம மக்களிடையே சண்டை உண்டாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் சுருக்கு வலை பயப்படுத்துவதில் அருகில் உள்ள மீனவ கிராமத்துடம் மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக இரன்டு மீனவ கிராம மக்களுக்கிடையே தகராறு இருந்துள்ளது. இதனால் ஒருதரப்பு மீனவர்களின் வலையை மர்மநபர்கள் தீயிட்டுக் கொளுத்தினார்கள் எனவே இந்த இரு கிராமங்களுக்கு இடையே தற்போது சண்டை மூண்டுள்ளது.இது தொடர்பாக இருக்கிராமத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கடலுக்குள் சண்டை போட்டுள்ளனர்.
இதனால் இருக்கிராமத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதையறிந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் கடலில் இருந்து சண்டை போடும் மீனவர்களை நோக்கி சுட்டு விடுவோம் உடனே வெளியேறுங்கள் என போலீஸ் தூப்பாக்கியை காட்டி மீனவர்களை விரட்டி அடித்து வருகின்றனர்.மோதல் முண்ட இரண்டு கிராமத்திலும் சுமார் 500_க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டால் அது பெரிய பிரச்சனையை உண்டாகும் என்று இரண்டு கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றன . எனவே இந்த பகுதிகளில் காலை முதலே பதட்டம் ஏற்பட்டு வருகின்றது.