Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவிலை விட்டு வெளியே போ …. மனம் மாறிய திருமாவளவன்…! வரவேற்ற BJP… !!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி,1975 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சொல்லி வருகிறோம், ஹிந்து என்பது ஒரு வாழ்க்கை முறை, ஒரு மதம் அல்ல என்று… இன்றைக்கு திருமாவளவன் அவர்கள் மற்ற இடதுசாரிகளும், காங்கிரஸ்காரர்களும் அதைத்தான் சொல்கிறார்கள் இன்றைக்கு.. இந்து என்பது ஒரு மதமே அல்ல. உடனே வைஷ்ணவமும், சைவமும் இருந்தது, உடனே திருமாவளவன் சொல்கிறார்…

நாங்கள் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறோம், அரசே  ஆலயத்தை விட்டு வெளியேறு. ஏனென்றால் கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக ஆகிவிட்டன. தமிழக அரசு அறநிலையத்துறையின்… இந்து அறநிலையத்துறை  கொள்ளையர்களின் கூடாரமாக ஆகிவிட்டன, அதனால் அரசே  ஆலயத்தை விட்டு வெளியேறு என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அன்றைக்கெல்லாம் கண்டித்து கொண்டிருந்த திருமாவளவன் அவர்கள் இன்றைக்கு நான் வரவேற்கிறேன்..  அவர் மனம் மாறி இருக்கிறார்.. இன்று சொல்கிறார்.

இந்து அறநிலையத்துறையை கலைத்து விடுங்கள், சைவ சமய அறநிலையத்துறை கொண்டு வாருங்கள், வைணவ சமய அறநிலைத்துறை கொண்டு வாருங்கள். ஏன் ? அன்றைக்கு இருந்தது அதுதானே… அப்படி என்றால் அந்த காலத்தில்,  திருமாவளவன் அவர்கள் சொல்கின்ற காலத்தில்..  வைஷ்ணவமும், சைவமும் இருந்திருந்து…  வேறு எதுவும் இல்லை,  அதனால் அது இருக்கட்டும் என்று சொன்னால்… ஒரு பேச்சுக்காக கேட்கிறேன்…  அந்த காலத்தில் இஸ்லாமும்,   கிறிஸ்தவமும் தமிழகத்தில் இல்லை, அப்படி என்றால், அந்த மதங்கள் இங்கே இருக்கக் கூடாது என்று சொல்கிறாரா ? திருமாவளவன் அவர்கள்… இதுதான் நம்முடைய கேள்வி.

நாம் என்ன சொல்கிறோம் ? ஒவ்வொரு காலத்திலும் ஏற்றவாறு மாறிக் கொண்டிருக்கும். ஹிந்து என்றால் யார் ? இதை நாம் அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது, யார் ஒருவர் கிறிஸ்துவர் இல்லையோ, யார் ஒருவர் முஸ்லிம் இல்லையோ,  யார் ஒருவர் பார்சி இல்லையோ அவர் ஹிந்து என்று நம்முடைய அரசியலமைப்பு   சட்டம், அம்பேத்கர் அவர்கள் அருளிய சட்டம் சொல்கிறது. இன்றைக்கு திருமாவளவன் அதற்கு எதிராக பேசிக் கொண்டிருக்கிறார், அதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |