Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ஷாக் ஆன சீனா…!! ”இறங்கி அடித்த இந்தியா” முதலீடுகளுக்கு கிடுக்கிப்பிடி ….!!

அந்நிய நேரடி முதலீட்டுக்கு இந்தியா விதித்த விதிமுறைகள் வர்த்தக அமைப்புக்கு எதிரானது என சீன வெளியுறவுத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஏராளமான நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. இந்த நிலையை பயன்படுத்தி சீனா இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வருகிறது. இதன் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை சொந்தம் கொண்டாடும் சூழல் உருவாகும் என எதிர்க்கட்சிகள் அரசை குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் வெளிநாடுகளை சேர்ந்த தனி நபர் அல்லது நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெற வேணடும் என்றும் இந்தியாவில் முதலீடு செய்துள்ள பாகிஸ்தான் வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசு அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடுஏற்கனவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மற்ற அண்டை நாடுகளான மியான்மர், இலங்கை, சீனா, நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து மேற்கொள்ளும் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டுமெனவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது இதற்கு கடுமையான எதிர்ப்பை சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன தூதரக செய்தி தொடர்பாளர் ஜீ ரோங் கூறியதாவது “அந்நிய நேரடி முதலீடு குறித்த இந்தியாவின் புதிய விதிமுறைகள் உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளுக்கு எதிரானது. இந்தியா அண்டை நாடுகளுக்கு பாகுபாடு காட்டுவது ஏற்புடையதல்ல” என தெரிவித்திருந்தார்.

Categories

Tech |