Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடியை கொல்ல தயாராகுங்கள்”…. மூத்த காங்கிரஸ் தலைவரின் சர்ச்சை பேச்சால் திடீரென வெடித்த பரபரப்பு….!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராஜா பட்டேரியா பன்னா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமரை பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் பேசியதாவது, மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டிவிட்டு, மொழி, ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் பிளவுபடுத்துவார். அதன் பிறகு மோடி அரசில் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது.

எனவே மோடியை கொலை செய்வதற்கு அனைவரும் தயாராகுங்கள். மோடியை வீழ்த்துவதாக நினைத்து கொல்ல தயாராகுங்கள் என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலான நிலையில், ராஜா பட்டேரியா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் ராஜா பட்டேரியா தான் கூட்டத்தில் அவ்வாறு பேசவில்லை எனவும் பிரதமர் மோடியை வீழ்த்த வேண்டும் என்று தான் கூறினேன் எனவும் கூறி ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |