ஆஸ்துமா பிரச்சினையிலிருந்து விடுபட இயற்கை வைத்திய முறையை இப்பத்து பார்க்கலாம்.
ஆஸ்துமா பிரச்சினையால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். அதுவும் இந்த குளிர்காலத்தில் கடுமையான பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். ஆஸ்துமா பிரச்சினையிலிருந்து விடுபட இயற்கை மருத்துவ குறிப்பு ஒன்றை பார்க்கலாம்.
ஆஸ்துமாவில் இருந்து விடுபடுவதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி வாடா மல்லி இதழ் விழுது, இரண்டு சிட்டிகை சுக்குப்பொடி, இரண்டு சிட்டிகை மிளகு பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இதை அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு வடிகட்ட வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி அளவு தேன் கலந்து மிதமான சூட்டில் பருகுவதன் மூலம் ஆஸ்துமா தொல்லையிலிருந்து விடுபடலாம்.