கொரோனா பாதிப்பில் மக்களை காப்பாற்றி, மக்களுக்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் இன்றுவரை 147, 337 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சிறப்பான சிகிச்சை அளித்து மக்களை பாதுகாக்கும் நாடுகள் எது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவி மக்களின் உயிரை குடிக்கும் கொடூரனாக இருந்து வரும் கொரோனாவை சிறப்பாக கையாண்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து மக்களை வீட்டுக்கு அனுப்பி வைக்த்து பாதுகாக்கும் நாடுகளே தற்போது பாதுகாப்பான நாடுகளாக கருதப்படுகிறது.
இது குறித்த புள்ளி விவரத்தை ஹாங்காங் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.கொரோனா பாதிக்கப்ட்டவர்களை தனிமைபடுத்திவைத்து, கண்காணித்து, அவசர சிகிச்சை தயார்நிலை போன்ற அம்சங்களை சிறப்பாக கொண்டுள்ளதை அடிப்படையாக வைத்து இந்த புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொரோனா காலகட்டத்தில் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடு இஸ்ரேல் என்று முடிவுகள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,362ஆக இருந்த போதிலும் அவர்களை மிகவும் திறம்பட அந்நாட்டு கையாண்டுள்ளதாக புள்ளிவிவரத்தில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. இக்கட்டாக இந்த காலகட்டத்தில் அரசாங்க நிர்வாக செயல்திறனுக்காக அந்நாட்டு 632.32 மதிப்பெண் பெற்றுள்ளது.
இஸ்ரேலுக்கு அடுத்படியாக ஐரோப்பிய நாடான ஜெர்மனி இருக்கின்றது. அவசர சிகிச்சை தயார்நிலை, கண்காணிப்பு மற்றும் கண்டறிதலுக்காக விஷயங்களில் ஜெர்மனி இஸ்ரேலை விட அதிக மதிப்பெண் பெற்றுள்ளது. உலக அளவில் மட்டுமில்லாமல், ஐரோப்பா கண்டத்திலே மிகவும் பாதுகாப்பான நாடு என்ற பெயரை ஜெர்மனி பெற்றுள்ளது என்று ஆய்வு தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் மக்களுக்கு பாதுகாப்பான நாடுகள் விவரம் :
இஸ்ரேல்
ஜெர்மனி
தென் கொரியா
ஆஸ்திரேலியா
சீனா
நியூசிலாந்து
தைவான்
சிங்கப்பூர்
ஜப்பான்
ஹாங்காங்