Categories
அரசியல் மாநில செய்திகள்

விரட்டும் கமல்…! ”எங்க போனாலும் விடமாட்டேன்” மிரளும் அதிமுக …!!

தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றாலும் உங்களை தடுக்க வருவேன் என்று கமல்ஹாசன் ட்விட் போட்டது அதிமுகவினரை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் முறையாக சமூக விலகல் கடைபிடிக்கப்படவில்லை. 5பேருக்கும் அதிகமாக கூட்டம் கூட்டமாக மது வாங்க மக்கள் குவிந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் சொல்லி இருந்த எந்த நிபந்தனையும் கடைப்பிடிக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுகள் மீற பட்டன என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அடுக்கப்பட்ட ஆதாரங்கள்:

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் டாஸ்மாக் மதுக்கடைகளில் மீறப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள் புகைப்படம் மூலமாகவும், வீடியோ மூலமாகவும் ஆதாரமாக சமர்பிக்கப்பட்டன. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் பொதுமுடக்கம் முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது ஆன்லைன் மூலமாக மதுவை விற்க தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

மக்கள் நீதி மய்யம் வெற்றி:

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு மக்கள் நீதீ மய்யத்தின் வெற்றியாக பார்க்கப்பட்டது. இது குறித்து அக்கட்சி தலைவர் கமல், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது.எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி #வெல்லும்தமிழகம் என்று ட்விட் செய்தார்.

கமல் ட்விட்:

மேல்முறையீடு:

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை  எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கூடாது என்று அரசியல் கட்சியினர் பலர் தெரிவித்திருந்த நிலையில் தமிழக அரசு அனைவரின் கண்டனத்தையும் காதுகளில் வாங்கிக்கொள்ளாமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதன் விசாரணை வரும் திங்கள்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உம்மை தடுக்க எங்கும் வருவோம்:

மேல்முறையீடு செய்த தமிழக அரசு மீது அரசியல் கட்சியினர் பலரும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் உம்மை தடுக்க எங்கும் வருவோம் என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிடுள்ளார். இதுகுறித்து அவர் பதிவில், குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும்.

கமல்ஹாசன் ட்விட்:

விரட்டும் கமல்:

ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் மதுக்கடைகள் மூடப்பட்ட வழக்கில் முக்கிய மனுதாரராக உள்ள மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மீது ஆளும் தரப்பு கடுப்பில் உள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகளை மூடியதால் தமிழக அரசின் வருவாய் மொத்தமாக சரிந்துவிட்டது. இந்த நிலையில் தான் உச்சநீதிமன்றம் சென்று எப்படியாவது மதுக்கடைகளை திறக்க உத்தரவு வாங்கிவிட வேண்டும் என்ற நடவடிக்கையில் அரசு மும்மரம் காட்டிவரும் நிலையில் எங்கும் வருவேன் உம்மை தடுப்பதற்கு என்ற கமலின் ட்விட் அதிமுகவை நடுங்க வைத்துள்ளது.

 

Categories

Tech |