Categories
சினிமா தமிழ் சினிமா

”நலமாக வரவேண்டும் சகோதரரே”….. கமல் நலம் பெற இளையராஜா ட்விட்டர் பதிவு…..!!!

 இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் நலம் பெற வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மைய கட்சித் தலைவராகவும் வலம் வருபவர். இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கமல் இன்னும் 60 ஆண்டுகள் இருக்கணும் : இளையராஜா ஆசை – dailyindia

 

இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இசைஞானி இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் நலம் பெற வாழ்த்தி பதிவிட்டுள்ளார். அதில், ”நலமாக வரவேண்டும் சகோதரரே. கலை உலகை ஆஹா என ஆச்சரியப்பட வைக்க வேண்டும். வாருங்கள் சீக்கிரம்” என தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |