கங்குலி விரைவில் குணமடைந்து திரும்பி வர வேண்டுவதாக சச்சின் தெண்டுல்கர் டுவிட் செய்துள்ளார்.
நெஞ்சுவலியால் மயக்கமடைந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கங்குலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் சுயநினைவுடன் இருக்கிறார். இதயத்தில் இரண்டு அமைப்புகள் இருக்கின்றன.
அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் கங்குலி விரைவில் குணமடைந்து வர வேண்டுவதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இப்போதுதான் உன் பிரச்சினை பற்றி தெரிய வந்தது. ஒவ்வொரு நாளும் நீ வேகமாக குணமடைந்து முழுமையாக திரும்பி வருவாய் என்று கூறியுள்ளார்.