Categories
தேசிய செய்திகள்

“இந்தியா மீது கை வைக்க எந்த நாட்டுக்கும் துணிவு கிடையாது” – ராஜ்நாத் சிங்

இந்திய பகுதிகள் மீது கை வைக்க எந்த நாட்டுக்கும் துணிவு கிடையாது பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங்கிடம் சீன ராணுவத்தினரால் பிரச்சினைகளை சந்தித்து வருவதாக நாட்டை ஒட்டி எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்து வருவது குறித்து கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்தவர், எல்லையில் பிரச்சினை ஏற்பட்டால் பாதுகாப்பு படைவீரர்கள் அதை கவனித்துக் கொள்வார்கள் என்றும் ஆதலால் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் கூறினார்.

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 10 வயது சிறார்கள் இடையேயும்  தீவிரவாத கருத்துக்கள் பரப்பப்படுவது கவலையளிப்பதாக முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்தது குறித்த கேள்விக்கு அங்குள்ள சிறார்களும் நமது நாட்டினர் தான், அவர்களை எதிர் மறை கண்ணோட்டத்தில் காண வேண்டாம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |