தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தின் வாத்தி ரைடு பாடல் புரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனான வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது .
https://twitter.com/XBFilmCreators/status/1347158884570435589
இந்தப் படத்தை பார்க்க ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் மிகுந்த ஆவலில் உள்ளனர் . இந்நிலையில் தினமும் மாஸ்டர் படத்தின் புதிய ப்ரோமோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது . இதுவரை வாத்தி கம்மிங் பாடல் புரோமோ மற்றும் விஜயின் மாஸ் வசனங்கள் கொண்ட வீடியோ வெளியானது . தற்போது ‘வாத்தி ரைடு’ பாடல் ப்ரோமோ வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.