தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் விஜய், சூர்யா, அஜித், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதோடு 4 ஹிந்தி படங்கள் மற்றும் 2 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருவதால் 24 மணி நேரமும் படம் பற்றிய சிந்தனை மட்டும் தான் இருக்கிறது.
எனக்கு திருமணத்தைப் பற்றி யோசிக்க கூட நேரம் இல்லை. என்னுடைய குடும்பத்தினர் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வற்புறுத்துகிறார்கள். ஆனால் தற்போது படங்களில் கவனம் செலுத்துவதால் திருமணம் குறித்து முடிவெடுக்க முடியவில்லை. ஆனால் அதற்காக திருமணம் வேண்டாம் என்றால் திருமணத்தில் விருப்பமே இல்லை என்று அர்த்தம் இல்லை. எனக்கும் விரைவில் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. மேலும் எனக்கு பிடித்தமான நடிப்பை மிகவும் நேசிக்கிறேன் என்று கூறினார்.