ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஆறு மாவட்டங்களின் 13 தொகுதிகளுக்கு இன்று காலை தொடங்கப்பட்டது.
இந்நிலையில், சைன்பூர் தொகுதியின் வாக்குச்சாவடி ஒன்றில் தல்தோகாஞ் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் கே.என். திருப்பதிக்கு எதிராக பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி கல்வீச்சு தாக்குதலிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் முன்னேறி செல்வதை அவர்கள் தடுக்க முயன்றுள்ளனர்.
இதனால் தன்னை போராட்டகாரர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள திருப்பதி கை துப்பாக்கி ஒன்று வைத்து கொண்டு அந்த வாக்குச்சாவடியில் வலம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பிற்காக அங்கிருந்த காவல்துறையினர் அவரிடம் இருந்த துப்பாக்கை கைப்பற்றிக் கொண்டு அவரை அங்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர்.
வாக்குப்பதிவில் மதியம் 1 மணி நிலவரப்படி 48. 83 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்கிறது.