நெய் உபயோகித்து வருவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
நெய் சாப்பிட விருப்பம் இல்லாமல் சிலர் ஒதுக்கி வைப்பதுண்டு. ஆனால் நெய்யில் இருப்பது நல்ல கொழுப்புதான். நெய், சருமத்தின் அழகை மெருகூட்ட பயன்படும்.
சருமம் நாள் முழுவதும் வரண்டு போய் காணப்பட்டால் அதற்கு நெய், சிறந்த தீர்வளிக்கிறது. சில சொட்டுகள் நெய்யை எடுத்துவறண்ட சருமத்தில் தடவிக் கொண்டு 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். அதை செய்வதினால் சருமத்திற்கு பாதுகாப்பாக செயல்பட்டு சருமம் வறண்டு போகாமல் தடுக்கிறது.
தினசரி உணவில் நெய் சேர்த்துக் கொண்டு வந்தால் இளமையாக இருக்கலாம். காரணம் நெய்யில் உள்ள விட்டமின் ஈ சரும சுருக்கங்கள், வயதாவதை தடுத்து இளமையை நீடிக்க செய்யும்.
தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் சில துளி நெய்யை கண்ணின் கருவளையம் உள்ள பகுதியில் போட்டு சிறிது நேரம் மசாஜ் செய்து அப்படியே விட்டு விடுங்கள். அதன்பின் காலையில் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவினால் நாளடைவில் கருவளையம் மறைந்து போகும்.
பெரும்பாலும் உடம்புக்கு எண்ணை தேய்த்து குளிப்பது என்றால் அநேகர் நல்லெண்ணெய் பயன்படுத்துவார்கள். ஆனால் அதைவிடவும் உங்கள் குளியலுக்கு நெய் ஒரு சிறந்த குளியல். எண்ணெய் 5 டேபிள் ஸ்பூன், நெய் பத்து சொட்டுகள் சேர்த்து உடம்பில் தடவிக் கொண்டு குளித்து வந்தால் சருமம் மிருதுவாக இருக்கும்.