இந்தோனேசிய நாட்டின் மிகப்பெரிய மசூதியானது புதுப்பிப்பு பணியில், தீ விபத்து ஏற்பட்டு இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் இருக்கும் ஜகர்த்தா என்னும் மிகப்பெரிய மசூதியினுடைய குவிமாடத்தை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது திடீரென்று தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நெருப்பை அணைக்க சுமார் 5 மணி நேரங்களாக போராடினர்.
எனினும், குவிமாடம் இடிந்து விழுந்தது. திடீரென்று தீப்பற்றி எரிய என்ன காரணம்? என்பது தெரியவில்லை. இதில், தீ விபத்து மற்றும் இடிந்து விழுந்ததில் யாரும் காயமடையவில்லை என்றும் தீ விபத்து ஏற்பட என்ன காரணம்? என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மசூதி மட்டுமல்லாமல் அந்த இஸ்லாமிய மைய வளாகத்திற்குள் ஆராய்ச்சி, வணிகம் மற்றும் கல்வி போன்ற வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக புதுப்பிப்பு பணி நடந்த போது இதே போன்று மசூதியின் குவிமாடம் தீப்பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது.