வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சுகுமார் என்பவருக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதற்கிடையே வேலூர் தொகுதியில் 28 பேர் போட்டியிடுவதாக இறுதி வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அதிமுக சார்பில் ஏவி சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் தீபலெட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சுகுமார் என்பவருக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் யாரும் போட்டியிடாத நிலையில் சுயேச்சை வேட்பாளர் சுகுமாருக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.