கடக ராசி அன்பர்களே…!! இன்று புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயன்படக்கூடும். பிரபலங்களால் ஆதாயம் அடையக்கூடும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். சாதிக்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும். அதுமட்டுமில்லாமல் கடவுள் பக்தி அதிகரிக்கும்.
கொடுக்கல் வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். கடன் விவகாரங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பொழுது ரொம்ப கவனமாக அனுப்புங்கள். இன்று குடும்பத்தில் ஓரளவு ஒற்றுமை மேலோங்கும் நாளாக இருக்கும். கணவன் மனைவியைப் பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. தனவரவு கூட உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் எப்பொழுதுமே உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : தெற்கு