Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு…”வாகனம் வாங்கும் முயற்சி”….. பக்கத்து வீட்டாரின் பாச மழை…..!!!

கடக ராசி அன்பர்களே…!! இன்று வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். இன்று தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று நிதானமாக இருப்பது நல்லது.

பங்குதாரர்கள் மனகசப்பு இன்று மாறும். அதேபோல உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தாமதமாகத்தான் வந்து சேரும். பண வரவு அதிகரிக்க கூடிய விஷயத்தில் ஈடுபடுவீர்கள். இன்று மேலிடத்தின் அனுசரணை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் இருக்கும். மாணவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

 அதிஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்

Categories

Tech |