இஞ்சியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
இஞ்சி பொதுவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடியது. அந்த வகையில், இஞ்சிச்சாறு உடலை வலுப்படுத்தும் என நமது சித்தர்கள் மருத்துவ குறிப்பு எழுதி வைத்துள்ளனர்.
இஞ்சி சாறை எடுத்தவுடன் 10 நிமிடம் வைத்திருந்தால் அடியில் வெள்ளையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் வண்டல் படியும். அதை விட்டுவிட்டு மேலே உள்ள தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும். காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மிக நல்லது. இதை வெறுமென குடிக்கலாம் அல்லது தேன் கலந்து குடிக்கலாம். இது பலருக்கு நன்மை செய்தாலும் , அல்சர் உள்ளவர்கள் இந்த செய்முறையை முற்றிலும் தவிர்க்கவேண்டும் அவர்கள் இதனை செய்தால் உடலில் விளைவுகள் ஏற்படும்.