பிரிட்டனில் 15 வயது சிறுமி ரயில் வந்து கொண்டிருந்த பாதையில் நடந்து சென்ற நிலையில் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
Cambridgeshir-ல் இருக்கும் Manea என்ற பகுதியில் ஒரு சிறுமி ரயில் வந்துகொண்டிருந்த பாதையில் நடக்க முயன்றுள்ளார். அப்போது சிறுமியின் உறவினர் தடுத்ததால் அவரை தாக்கியிருக்கிறார். அதன் பின்பு ரயில் பாதையில் நடக்க தொடங்கினார். இதனிடையே பாதையில் ஒரு சிறுமி வருவதை ரயிலை இயக்கி கொண்டிருந்தவர் பார்த்துவிட்டார்.
எனவே உடனடியாக ரயிலை நிறுத்தினார். சிறுமி நின்ற இடத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் ரயில் நின்று விட்டது. தகவல் அறிந்தவுடன் காவல்துறையினர் வந்து சிறுமியை கைது செய்தனர். சிறுமி மீது, ரயில்வேக்குரிய இடத்தில் எல்லைமீறி புகுந்தது மற்றும் பெண்ணை தாக்கியது போன்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.
இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எனினும் ரயில் நின்றதால் அந்த பாதையில் செல்லக்கூடிய பல ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகியுள்ளது. எனவே ரயில் சேவை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.