பெற்றோர்கள் சண்டையிட்டதால் 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ராமநாதபுரம் மாவட்டத்தில் பலாத்காரக் தெருவில் ஜீவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். ஜீவானந்தத்திற்கு சினேகா என்ற ஒரு மகள் உள்ளார். 14 வயதான சினேகா தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஜீவானந்தத்திற்கும், சினேகாவின் தாயார் சீதாவிற்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை நடந்துள்ளது.
தனது பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதை பார்த்த சினேகா மிகவும் மன உளைச்சலில் தவிர்த்துள்ளார். இதன் காரணமாக தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சினேகாவின் மரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.