Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எப்போதுமே சோகம் தான்…. மாணவிக்கு நடந்த விபரீதம்…. என்ன காரணம்…??

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லூர்து மாதா தெருவில் மேரி ஸ்டானிஸ்டா என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில தினங்களாகவே மேரி ஸ்டானிஸ்டா சோகமாக காணப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து உடனடியாக கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேரி ஸ்டானிஸ்டா எந்த காரணத்திற்காக தற்கொலை செய்துக் கொண்டார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |