தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குந்துமாரணபள்ளி கிராமத்தில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருவேணி என்ற ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வெங்கடேஷ் மரத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். இந்த விபத்தில் அவரது இடுப்பு எலும்பு உடைந்து படுத்த படுக்கையாகி விட்டார்.
இதனையடுத்து தந்தை படும் கஷ்டத்தை பார்த்து மனமுடைந்த திருவேணி தனது வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் மயங்கி கிடந்த திருவேணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் திருவேணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கெலமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.