Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்த கல்லூரி மாணவி… சம்மந்தம் இல்லாமல் வந்த வாலிபர்கள்… மடக்கி பிடித்த பொதுமக்கள்… நாமக்கல்லில் பரபரப்பு…!!

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குச்சிக்காடு பகுதியில் கண்ணாயிரம் என்ற கட்டிட மேஸ்திரி வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மகள் உள்ளார். இவர் நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அனிதா தனது துப்பட்டாவால் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து அனிதா எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் ஊருக்கு பட்டணம் ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வரும் மூன்று பேர் சென்றுள்ளனர்.

அப்போது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து அந்த 3 வாலிபர்களையும் பிடிக்க முயற்சித்தபோது, ஒருவர் தப்பி ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது, பொதுமக்கள் பிடிபட்ட 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து நாமகிரிப்பேட்டை போலீசார் அவர்கள் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |