Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு வந்தவர்… எப்போவுமே சோகம் தான்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… போலீசாரின் தீவிர விசாரணை…!!

பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் தெருவில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்சிதா என்ற மகள் உள்ளார். இவர் பி.இ படித்து முடித்துவிட்டு அமெரிக்காவில் மேல்படிப்பு படித்து வந்துள்ளார். இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த சஞ்சிதா கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து உள்ளார். இந்நிலையில் மனமுடைந்து தனது அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சஞ்சிதா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |